பாடசாலை செல்லும் வயதுள்ள குழந்தைகளுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய திட்டத்தின் மூலம் பெரும் சமூக சீர்கேடு ஏற்படக்கூடும் என தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் எச்சரித்துள்ளன.
இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை தெளிவுபடுத்தியிருந்தனர்.
இதன் போது கருத்துத் தெரவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
”பாடாசலையில் படிக்கும் குழந்தைகளுக்கு, தனியார் துறையில், 20 மணி நேரம் பணியாற்ற வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். பாடசாலைக் கல்வி சீர்குலைந்துள்ள சூழலில் கல்வியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்காது மாணவர்களை வேலைக்கு அனுப்ப நினைத்தால், என்ன செய்வது? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.” என்றார்.