பாடசாலை மாணவர்களுக்கு
பகுதி நேரமாக தனியார் துறையில் வேலை வாய்ப்பை பெறும் வகையில்
சட்டத்தில் திருத்தங்களை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
16 தொடக்கம் 20 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பகுதி நேரமாக தொழில் புரியும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் தொழில் செய்யும் சூழலுக்கு பழக்கப்படாததன் காரணமாக வேலை உலகில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றமை அவதானிக்கப்பட்டது.
மாதாந்தம் 20 மணித்தியாலங்கள வேலை செய்யக்கூடிய வகையில் இவ்வாறு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். தொழில் புரிபவர்களுக்கான கொடுப்பனவை வழங்கவும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.