Work From Home மேல் மாகாணத்தில் மீண்டும் அறிமுகம்
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரும் அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ளார்.
மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.