அரசாங்கம் திங்கட்கிழமை (20) முதல் பொதுத் துறைக்கு இரண்டு வார கால வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கையின் ஊடாக இந்த வேலைத்திட்டம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது