இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்வி முதுமாணி 2021/2022 -தெரிவு பரீட்சை

இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்வி முதுமாணி  2021/2022 நிகழ்ச்சி திட்டத்திற்கான தெரிவு பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி, நிகழ்நிலை பரிட்சையாக நடைபெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பகரமாக, விண்ணப்பதாரிகளுக்கு அருகில் உள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

பரீட்சார்த்திகள் தாம், தோற்ற விரும்பும் அல்லது தமக்கு அருகிலுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக பிராந்திய நிலையங்களை பற்றிய விருப்பை பெற்றுக் கொள்வதற்காக,  பரிட்சார்த்திகளின் மின்னஞ்சலுக்கு இணைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவ்விணைப்பை உடனடியாக பூரணப்படுத்தி அனுப்புமாறு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!