அதிபர் விண்ணப்பம் – அமைச்சரவைப் பத்திரம் என்ன கூறுகிறது

Teachmore

இலங்கை அதிபர் சேவையில் காணப்படும் 4718 வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

இவ்விண்ணப்பங்கள் அமைச்சரவை தீர்மானம் இலக்கம் 21/0320/308/016 மற்றும் 01.03.2021 இன் அடிப்படையில் கோரப்பட்டுள்ளது. 
கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் இச்சந்தர்ப்பத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் போட்டிப் பரீட்சையை நடாத்துவதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்காவும் என்று குறிப்பிடப்பட்டு அனுமதி கோரப்பட்டுள்ளது. 

 குறித்த அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு:

இலங்கை அதிபர் சேவை தரம் iii இற்கான ஆட்சேர்ப்பு

தற்போது இலங்கை அதிபர் சேவை I, IIமற்றும் III தங்களில் 4,600 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையால் போட்டிப்பரீட்சை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி முறையாக பதவி நியமனங்களை வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் எடுக்கும் என அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது நீணடகாலமாக அதிபர் பதவியில் பதில் கடமைகளை மேற்கொள்ளும் ஆசிரியர் சேவையில் தகைமை பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் சேவை யாப்பிற்கமைய தகைமைகளைப் பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சேவையிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கி இச்சந்தர்ப்பத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் போட்டிப் பரீட்சையை நடாத்துவதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்காவும், இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கான நியமனங்களை வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


விண்ணப்ப விபரங்கள் 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!