அலுவலக நேரத்தில் மாற்றம்?

 

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

 இதில் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அலுவலக நேர திருத்தம், சூம் தொழில்நுட்பம் மூலம் அரச நிறுவனங்களில் கலந்துரையாடல்களை நடத்துதல், பாடசாலையை ஒரு நாள் தொலைக் கல்வி மூலம் வழங்குதல் உள்ளிட்டவை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால்  எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்ட போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களின் போது அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இது தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டதுடன் அவரும் அதனை உறுதிப்படுத்தினார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!