இன்று நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை !

இன்று நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை !

பெப்ரவரி முதலாம் திகதிக்குப் பின்னர், 2021 (2022) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையை இலக்காகக் கொண்டு பிரத்தியேக வகுப்புகள் அல்லது பயிற்சிகளை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடம் சார்ந்த கருத்தரங்குகள் அல்லது வகுப்புகளை ஏற்பாடு செய்தல், நடத்துதல், பரீட்சை சார்ந்த வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், பரீட்சைக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் மாதிரி வினாத்தாள்களை வழங்குவதாகக் கூறி மின்னணு ஊடகங்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் மூலம் விநியோகம் மற்றும் விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், “ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் விதிமுறைகளை மீறினால், அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பரீட்சைகள் திணைக்களம் அல்லது பின்வரும் இலக்கங்களுக்கு முறைப்பாடு அளிக்கலாம்” என்று அவர் கூறினார்.

பொலிஸ் தலைமையகம்: 0112421111, பொலிஸ் அவசர இலக்கம்: 119

ஹொட்லைன் (பரீட்சைகள் திணைக்களம்): 1911

பாடசாலை பரீட்சைகள் ஏற்பாட்டுக் கிளை: 0112784208 / 0112784537

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!