இலங்கை நிர்வாக சேவைக்கு 199 பேருக்கு நியமனக்கடிதங்கள்

 நிருவாக சேவைக்கு புதிதாக 199 நிருவாக உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சை 2021 இன் பெறுபேறுகளின் அடிப்படையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 199 நிர்வாக அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த (03) ஆம் திகதி இடம்பெற்றது. 

 ஜனக பண்டார தென்னகோன், பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரதீபா சேரசிங்க மற்றும் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு நான்கு நிறுவனங்களில் 6 மாத வதிவிட விரைவுபடுத்தப்பட்ட பயிற்சிகளை வழங்க பொது சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  

இந்த அதிகாரிகள் இம்மாதம் 7ஆம் திகதி முதல் அமைச்சுக்கள், அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள் போன்றவற்றின் கடமைகளுடன் இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!