உயர் தரப் பரீட்சை கால விடுமுறையில் ஆரம்ப்ப் பிரிவு பாடசாலைகளை நடாத்துதல்
உயர் தரப் பரீட்சை கால விடுமுறையில் ஆரம்ப்ப் பிரிவு பாடசாலைகளை நடாத்துதல்
பல வலயக் கல்விக் காரியாலயங்கள் ஆரம்ப்ப் பிரிவு வகுப்புக்களை நடாத்தெவதற்கு அனுமதி கோரியுள்ள பின்னணியில், பரீட்சை கடமைகளுக்கு இடையூறு ஏற்படாது என உறுதி வழங்கப்பட்டுள்ளதாலும் ஆரம்ப பாடசாலைகளை மூடுவது மாணவர்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படு்த்தும் என்பதாலும் ஆரம்ப வகுப்புக்களுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வலய மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலியே பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஒரு பாடசாலையின் அல்லது பல பாடசாலைகளின் நடவடிக்கைகள் பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுமாயின் அது தொடர்பாக விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் வலய மற்றும் மாகாண அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவார் என்றும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
teachmore.lk