கல்வியியல் கல்லூரிகளின் பாடநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு பாடசாலைத் தெரிவுக்கான விண்ணப்பம் விரைவில்

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இருந்து இறுதிப் பரீட்சை மற்றும் கற்பித்தல் பயிற்சியை முடித்தவர்களுக்கான நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு கட்டமாக நியமனத்திற்கான பாடசாலைகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும் அதன் அடிப்படையில் பொருத்தமான பாடசாலைகளுக்கு நியனம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிய முடியகிறது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை கல்வி அமைச்சு விரையில் வெளியிடும் என்று கல்வி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெரும்பாலும் 15- 20 ஆம் திகதிக்கிடையில் ஒரு தினத்தில் பாடசாலைத் தெரிவுக்கான விண்ணப்பம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!