க.பொ.த சாதாரண தர அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும்.

க.பொ.த சாதாரண தர அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும்.
அதன் பின்னர் புலமைப்புரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம். டி. தர்மசேன நேற்று (28) தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக, சாதாரண தர இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகியவற் றுக்கான செய்முறை பரீட்சைகள் நடத்த முடியாததால், பரீட்சை முடிவுகள் அழகியல் முடிவுகள் இல்லாமல் வெளியிடப்பட்டன. அந்தப் பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் கடந்த டிசம்பரில் நடத்தப்பட்டன.
இந்தப் பாடங்களுக்காக ஒரு இலட்சத்து அறுபத்தொன்பதாயிரம் விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.
இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!