தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதற்கு ஆரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று பொலன்னறுவையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்காலத்தில் நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பொலன்னறுவ ரோயல் கல்லூரியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களில் 14 வீதமானோரே தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உள்ளனர்.
கல்வியியலாளர்கள் பலர் இதனை ரத்துச் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளனர். எனவே தான் நான் இதனை ரத்துச் செய்ய பிரேரித்தேன். அரசாங்கம் இதன் பிறகு புலமைப் பரிசில் பரீட்சையை நடாத்துவதில்லை என்று தீர்மானித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் எந்த வருடத்திலிருந்து இப்பரீட்சை நடைபெறாது என்று அவர் குறிப்பிடவில்லை என்பது அவதானத்துக்குரியது.