தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த் துறை பணிப்பாளராக S. உதயச்சந்திரன் பதவியேற்பு

Teachmore

தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட S. உதயச்சந்திரன் அவர்கள் தனது கடமைகளை நேற்று (2) பொறுப்பேற்றுக் கொண்டார். 

மிக நீண்ட காலம் தேசிய கல்வி நிறுவகத்தின் ஆரம்பக் கல்வித் துறையில் கடமையாற்றிய அவர் அண்மையில் இடம்பெற்ற பணிப்பாளர்கள் நேர்முகத்தேர்வில் தமிழ் துறையின் பணிப்பாளாராத் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நேர்முகத் தேர்வின் போது தேசிய கல்வி நிறுவகத்தின் பத்து துறைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் தமிழ் துறைக்கு எஸ். உதயச் சந்திரன்  அவர்கள் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறைக்கு சன்முகலிங்கம் அவர்கள் என இரு தமிழ் பேசும் பணிப்பாளர்கள் நியமனம் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். 

தமிழ்துறையின் பணிப்பாளர் பதவி ஏற்கும் நிகழ்வு தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி தர்சன சமரவீர மற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் பத்மசிரி ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது தேசிய கல்வி நிறுவகத்தின் பணியணியினர் பலர் கலந்து கொண்டு புதிய பணிப்பாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

புதிய பணிப்பாளர் எஸ். உதயச்சந்திரன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!