அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்க, ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள கொழும்பு, லோட்டஸ் வீதியில் வைத்து பொலிசார் தண்ணீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்களை மேற்கொண்டள்ளனர்.
இந்த எதிர்ப்பு பேரணி காரணமாக, லேக் ஹவுஸிற்கு அருகில் காலி முகத்திற்கு செல்லும் லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது.
தனியார் பல்கலைக்கழக சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். (தினகரன்)