ஏற்கனவே திட்டமிட்டபடி மூன்றாவது தவணைக்காக நவம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்து இந்த வார இறுதியில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
சிரிலங்கா பொதுஜன முன்னணி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஆழமான ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
மாணவர்களின் ஆரோக்கியம் தீர்மானம் மேற்கொள்வதில் ஒரு முக்கியமான காரணியாக விளங்கும் என்றும் வலியுறுத்தினார்.