பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவிருக்கின்றன. நாடளாவிய ரீதியில் 332 பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுவதாகவும்இ இந்த எண்ணிக்கை 377 வரை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நில அளவையாளர் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் அதிகரித்துவரும் சனத்தொகை என்பனவற்றை கருத்திற் கொண்டு தேசிய செயற்றிட்டத்தின் கீழ் புதிதாக 45 பிரதேச செயலாளர் பிரிவுகள் புதிதாக அமைக்கப்படவிருக்கின்றன என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.