முன்பள்ளிகள் வழமைபோன்று நடைபெறும்

 

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் முன்பள்ளிகள் மூடப்படமாட்டாது என பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

 நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் முன்பள்ளிகள் நீண்டகாலமாக மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முடிந்தவரை பிள்ளைகளின் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து வழமை போன்று முன்பள்ளிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!