புதிய அதிபர்கள் 1918 பேரை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பின் படி, உரிய வெற்றிடங்களை நிரப்புமாறு கல்வி அமைச்சர் கோரியமையை அடுத்து நேர்முகப்பரீட்சையை துரிதப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் பாடசாலைகளில் காணப்படும் 1918 வெற்றிடங்களை நிரப்புவதற்கே இந்நேர்முகப்பரீட்சை நடைபெறுகின்றது.
தேவையான எண்ணிக்கையை விட இரு மடங்காகத் தயாரிக்கப்பட்ட சித்திடைந்தோர் பட்டியலில் ஆகக் கூடிய புள்ளிகள் பெற்றவர்களுக்கு நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.