தரம் ஒன்றுக்கு மாணவர் ஒருவரை அனுமதிப்பதற்காக ஒரு லட்சம் ரூபா லஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காலி அனுலா வித்தியாலய அதிபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலி நீதவான் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
குறித்த அதிபர் அதிபர் காரியாலயத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.