அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கும் செயற்பாட்டுக்கு தடையாக உள்ள வயது எல்லையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரச சேவையில் இணைவதற்கான ஆகக் கூடிய வயதெல்லை 45 ஆகக் காணப்பட்ட போதிலும் ஆசிரியர் சேவையில் நுழைவதுற்கு வயதெல்லை 35 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே அபிவிருத்தி உத்தியேகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பதற்கு இந்த தடையை நீக்குதல் வேண்டும். இது தொடர்பாக தொடர்புடைய தரப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி உடன்பாட்டின் அடிப்படையில் ஏற்பாடுகுள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துளளார்.