உயர் தரப் பரீட்சைகள் மேலும் தாமதமாகும்

.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒரு மாதம் பிற்போடப்படும என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பரீட்சை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஆரம்பத்தில் பாடசாலைகள் அவ்வப்போது மூடப்பட்டன, பரீட்சைகள் மீண்டும் மீண்டும் தாமதமாகின.

எவ்வாறாயினும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகள் அவ்வப்போது மூடப்படுகின்றன அல்லது இயங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன என்றார்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!