தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேச ஆசிரியர்கள் பாடசாலை ஊழியர்கள் கடமைக்கு திரும்ப வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர் விடுக்கப்பட்ட பல்வேறு வழிகாட்டல் கடிதங்களின் அடிப்படையில் மேல்மாகாணத்திற்குள் வேறு மாகாண ஆசிரியர்கள் மாணவர்கள் வருகை தருவது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த மட்டுப்படுத்தல்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2021.01.26 தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களின் வழிகாட்டலின் படி, பாடசாலைக் கல்வி கட்டாயமானது என்பதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்த்து ஏனைய பிரதேசங்களுக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் பயணிப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, 2021.02.17 முதல் அனைத்து ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் தமது நிரந்தர சேவை பாடசாலைக்கு சமூகளிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.