மாணவர் ஒருவரைத் தண்டித்த குற்றத்திற்காக ஆசிரியை ரம்ய த சில்வா விற்கு குருணாகல் மேல் நிதி மன்றம் வழங்கிய இரண்டு வருட சிறைத்தண்டனைக்கு ஆட்சேபம் தெரிவித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றைத் திட்டமிட்டுள்ளது. .
நேற்று குறித்த ஆசிரியையின் வீட்டிற்கு வஜயம் மேற்கொண்ட தொழிற்சங்க அதிகாரிகள் ஆசிரியையின் சகோதரர் உடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.
பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க மகிந்த ஜயசிங்கவை செயலாளராகக் கொண்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.
எனவே, குறித்த ஆசிரியைக்கு ஆதரவு தெரிவித்து அனைவரையும் ஆர்ப்பாட்த்தில் கலந்து கொள்ளுமாறு சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.