இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில ்ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மீது தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அதிபர்கள் சேவையினரின் சம்பள முரண்பாடுகள் சுமார் 22 வருடங்களாக நீடிப்பதாகவும் அதனை சீர் செய்யுமாறு பிரதான கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வார்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் பத்தரமுல்ல பகுதியில் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று பிற்பகல் 2 மணிக்கும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.