அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இறுதி ஆவணங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டதாகவும் அவை நிறைவடைந்து விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவருடைய கருத்துக்களின் படி இன்று நன்பகலுக்கு முன்னர் பெறுபேறு வெளிவரும் என ஊகிக்க முடியும்.
முன்னதாக 28 ஆம் திகதி பெறுபேறு வெளியாகும் என திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் நேரம் குறிப்பிடப்படவில்லை. எனவே மக்கள் நேற்று நள்ளிரவு முதல் இணையத்தளத்தில் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தை நெருங்க முடியாத நிலையும் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.