பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள ஏற்கும் உத்தியோகத்தர் பதவியில் நிலவூகின்ற
வெற்றிடத்தை நிரப்பும் முகமாக சிறந்த உடலாரோக்கியமும் நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இதன் கீழ் தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2019 மே
மாதம் 24 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் ”பாராளுமன்றச் செயலாளர் நாயகம்,
இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டே”” என்ற முகவரிக்கு பதிவூத் தபாலில் அனுப்பி வைக்கப்படுதல்
வேண்டும். விண்ணப்பம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ”ஏற்கும் உத்தியோகத்தர் பதவி”” எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
1. கடமையின் தன்மை.-
பாராளுமன்ற சமையலறைக்காக பெற்றுக்கொள்ளப்படும் மரக்கறி வகைகள், பழ வர்க்கங்கள், இறைச்சி, மீன் முதலிய அனைத்து வகையான உணவூப் பொருட்களையூம் பானங்களையூம் பொருள் கட்டளையின் பிரகாரம் பொறுப்பேற்றல்இ பொறுப்பேற்கப்படும் அத்தகைய உணவூ பானங்கள் தரத்தில் உயர்ந்தனவா என்பதை உறுதிசெய்துகொள்ளல்,
உரிய முறையில் பொறுப்பேற்கப்படும் பொருட்கள் தொடர்பான விபரங்களை பட்டியல்படுத்தி உரிய செலவூப்பட்டியல்களை கொடுப்பனவின் நிமித்தம் குறிப்பீடுசெய்தல்.
3. கல்விஃஉயர் கல்விஃதொழில் தகைமைகள்.-
கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் இரண்டு
அமர்வூகளுக்கு மேற்படாத அமர்வூகளில் சிங்களம்/தமிழ், கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்திகள் அடங்கலாக ஆங்கில மொழியில் சித்தியூடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தினால் அல்லது தொழில்நுட்பக் கல்வி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சித் திணைக்களத்தின் கீழ் பதிவூசெய்யப்பட்ட ஒரு தொழில்நுட்பக் கல்லூரியினால் அல்லது ஒரு அரசாங்க விவசாயததொழில்நுட்பக் கல்லூரியினால் நடத்தப்படும் உணவூத் தொழில்நுட்பம் அல்லது விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம்
பற்றிய ஒரு தேசிய டிப்ளோமா பாடநெறியை (என்விகியு மட்டம் 5 அல்லது 6) பின்பற்றி சித்தியடைந்திருத்தல்.
குறிப்பு: ஒரு நட்சத்திர வகுப்பு ஹோட்டலில் அல்லது நாளாந்தம் நுகர்வூக்காக உணவூ பானங்களை விநியோகிக்கும் அரசாங்கத்தின் அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் ஏற்கும்
உத்தியோகத்தராகஃகளஞ்சிய உத்தியோகத்தராக /தரக கட்டுப்பாட்டு உத்தியோகத்தராக/ தரப் பாதுகாப்பு உத்தியோகத்தராக
பணியாற்றிய அனுபவத்தையூடைய மற்றும் கணினி அறிவூ பற்றிய சான்றிதழை சமர்ப்பிக்கக்கூடிய விண்ணப்பதாரர்களுக்கு
நேர்முகப் பரீட்சையில் அதிக முந்துரிமை வழங்கப்படும்.
4. வயதெல்லை.- விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதிற்கு 25 வயதுக்கு குறையாமலும் மற்றும் 40
வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். (அரசாங்க/ மாகாண அரசாங்க சேவையிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு
இந்த உச்ச வயதெல்லை ஏற்புடையதாகாது).
5. ஆட்சேர்ப்பு முறை.- நேர்முகப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்த்துக் கொள்ளப்படும்.