இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் உதவிப் பரிசோதகர் தொழில்நுட்பத்திற்கு உட்படாத சேவைப் பிரிவில் போதனாசிரியர் தரம் 111 இற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019
இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் உதவிப் பரிசோதகர் தொழில்நுட்பத்திற்கு உட்படாத சேவைப் பிரிவில் போதனாசிரியர் தரம் 111 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காக தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
01. இப்பரீட்சையின் மூலம் போதனாசிரியர் தரம் 111 இன் பதவிக்கு ஆட்சேர்ப்பானது மேற்கொள்ளப்படுகின்றது.
எழுத்துப் பரீட்சை.- இப்பரீட்சையானது பின்வரும் இரண்டு (02) வினாத் தாள்களைக் கொண்டிருக்கும்.
(1) பொது அறிவூப் பரீட்சை
(2) நுண்ணறிவூப் பரீட்சை
02. நியமிக்கப்படவூள்ள ஆட்களின் எண்ணிக்கை 10 ஆகும். வெற்றிட எண்ணிக்கைக்கு மேல் இறுதி வெற்றிடம் அல்லது இறுதியான சில வெற்றிடங்களுக்காக சமமான புள்ளிகளைப் பெற்றுள்ள விண்ணப்பதாரி
காணப்படும் நிலைமைகளில் அத்தகைய வெற்றிடங்களை நிரப்புவதற்கான தீர்மானமானது நடைமுறை விதிகளின்
பிரிவூ 80 இற்கமைய அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் எடுக்கப்படல் வேண்டும்.