கல்வி அமைச்சு
இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு II ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண்
தடைதாண்டல் பரீட்சை- 2019
இலக்கம் 1885/ 31 மற்றும் 2014.10.22 ஆந் திகதிய இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைய இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு II ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல்
பரீட்சை – 2020, பெப்புருவரி மாதம் கொழும்பில் நடைபெறும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது.
02. இப் பரீட்சைக்குரிய பாட விதானம் மற்றும் ஏனைய ஒழுங்கு விதிகள் இலக்கம் 1885/ 31 கொண்ட 2014.10.22 ஆந் திகதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில்
பிரசுரிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் வசதிக்காக பாடவிதானம் மற்றும் ஏனைய ஒழுங்குவிதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
(அ) பரீட்சை ஒழுங்கு விதிகள் – வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையின் பாடங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:-
பாட விதானம் :-
(i) பாடசாலை நிருவாகம் மற்றும் மேற்பாh;வை.- பாடசாலை ஒன்றின் சிறந்த நிருவாகத்திற்காக அதிபாpன் செயற்பாட்டுப் பணிகள் தொடா;பில் பாPட்சார்த்தியின் அறிவூ மற்றும் விளக்கத்தை பரிசீலனை செய்வதற்கான கேள்விகள் இதில் அடங்கியூள்ளன. பாடசாலை முகாமைத்துவ
முறைகள் நேரசூசியைத் தயாரித்தல் பொறுப்புக்களைப் பகிர்தல் பாடசாலை அபிவிருத்திக்காக மக்கள் பங்கேற்பு பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவம் பாடசாலையை
அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் அபிவிருத்தி, ஆசிரியர் நலன்புரி, மாணவா்களுக்குப் பொருத்தமான பாடசாலை சார்ந்த எண்ணக்கரு பாடசாலையைக் கேந்திரமாகக் கொண்ட கல்வி ஆகிய துறைகள் தொடர்பில் அறிவூ மதிப்பீடு செய்யப்படும்.
(ii) பாடசாலைத் திட்டமிடல்.- அபிவிருத்தியின் முன்னோடியான அதிபர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பரீட்சார்த்தியின் அறிவூ மற்றும் விளக்கத்தைப் பரீட்சிப்பதற்கான கேள்விகள் இதில் உள்ளடங்கியூள்ளன. பாடசாலை முகாமைத்துவ சபை, பாடசாலையொன்றின் நோக்கு மற்றும்
பணிக்கூற்று பாடசாலைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரித்தல், இணைந்த திட்டங்கள், நீண்ட கால மற்றும் குறுகிய காலத் திட்டங்கள், வருடாந்தம் அமுலாக்கல் திட்டங்கள், பாடசாலை வலையமைப்பு மற்றும் வளத் திட்டமிடல், பிரதேச அபிவிருத்திக்கு பாடசாலையின்
பங்களிப்பு ஆகிய துறைகள் தொடா;பான அறிவூ மதிப்பீடு செய்யப்படும்.
(iii) கல்வியின் புதிய முன்னேற்றங்கள் மற்றும் செயற்பாடுகள்.- கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான புதிய எண்ணக்கரு, அனுபவங்கள் ஊடாக கற்றல், தர்க்க ரீதியிலான சிந்தனைகள், கல்வியின் சமநிலை, விசேட தேவைகள் கொண்டோருக்கான கல்வி, முறைசாராக் கல்வி, முதியோர் கல்வி, ஆயூட்கால கல்வி, திறனை அடிப்படையாகக் கொண்ட கல்வி, வாழ்வதற்கான கல்வி, மாணவர் ஆலோசனை மற்றும் தொழில்சார் வழிகாட்டல் ஆகிய விடயங்கள் தொடர்பிலான அறிவூ மதிப்பீடு
செய்யப்படும்.
03. பரீட்சையின் மொழி மூலம் : சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் பரீட்சை நடைபெறும்.
விண்ணப்பதாரி விரும்பிய ஒரு மொழி மூலத்தில் மாத்திரம் பாPட்சைக்குத் தோற்ற வேண்டும். பரீட்சார்த்தி தமது விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மொழி மூலத்தை மாற்றியமைக்க இடமளிக்கப்படமாட்டாது.
04. பரீட்சைக்கு தோற்றும் சகல விண்ணப்பதாரிகளினதும் பெறுபேறுகள் அடங்கிய பெறுபேற்று ஆவணம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்படும். அதன் பிரகாரம் அப்பெறுபேறுகள் கல்வி
அமைச்சின் இணையத் தளத்தில் வெளியிடப்படும். பரீட்சார்த்திகளுக்கு தனிப்பட்ட ரீதியில் பெறுபேறுகளை அனுப்ப
பரீட்சை ஆணையாளா; நாயகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.
05. இவ் அறிவித்தலின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கமைய விண்ணப்பப்படிவத்தின் தலைப்பு இல. 01 தொடக்கம் 07 வரை முதலாவது பக்கத்திலும் எஞ்சியவை இரண்டாவது பக்கத்திலுமாக தயாரிக்க வேண்டியதுடன் அதற்குரிய தகவல்களை தமது கையெழுத்தில் தெளிவாக உள்ளடக்க வேண்டும். மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு ஒவ்வாத விண்ணப்பப்படிவங்களும் பூரணமான தகவல்கள் வழங்கப்படாத விண்ணப்பப் படிவங்களும் முன்னறிவித்தலின்றி நிராகரிக்கப்படும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் நிழற்படப் பிரதி
மற்றும் பரீட்சைக் கட்டணத்திற்குரிய பற்றுச் சீட்டின் போட்டோப் பிரதியை வைத்திருப்பது பயன்மிக்கதாக அமையூம் என்பதை அறியத்தருகிறேன்.
மேலும் பூரணப்படுத்தப்படும் விண்ணப்பப்படிவம் பரீட்சை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கமைவானதா என்பது குறித்து விண்ணப்பதாரி விளக்கம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறின்றேல்,
விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படும் என்பதையூம் மேலும் அறியத்தருகிறேன். விண்ணப்பப்படிவத்தை தயாரிக்கும்போது
அவ் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சையின் பெயரை சிங்கள விண்ணப்பப்படிவங்களில் சிங்களத்திற்கு
மேலதிகமாக ஆங்கிலத்திலும் தமிழ் விண்ணப்பப்படிவங்களில் தமிழுக்கு மேலதிகமாக ஆங்கிலத்திலும் குறிப்பிடுவது அவசியம் என்பதை அறியத்தருகிறேன்.
போலித் தகவல்களுக்கான தண்டனை.- விண்ணப்பப்படிவத்தை நிரப்பும்போது மிகக் கவனத்துடன் சரியான தகவல்களை வழங்க வேண்டும். இப்பரீட்சையின் சட்ட ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய பரீட்சார்த்தி
தகைமைற்றவர் எனத் தெரிய வரும் பட்சத்தில் பரீட்சைக்கு முன்னர் அல்லது பரீட்சை நடைபெறும் வேளையில் அல்லது பரீட்சைக்குப் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவரது பரீட்சார்த்தி தன்மை இரத்துச் செய்ய முடியூம்.
06. பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் பரீட்சை நடாத்தப்படுவதுடன் அதனை நடாத்துவதற்காக அவரினால் விடுவிக்கப்பட்டுள்ள சட்ட ஒழுங்குகளை பின்பற்ற பரீட்சார்த்தி கட்டுப்பட்டுள்ளார். பரீட்சைக்கான சட்ட ஒழுங்குகள் இவ்வறிவித்தலின் இறுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
07. விண்ணப்பப்படிவத்தை 2019, நவெம்பர் மாதம் 18 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் ”பரீட்சை ஆணையாளா; நாயகம், ஒழுங்கமைப்பு (நிறுவன மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள்) கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், தபால்பெட்டி இலக்கம் 1503, கொழும்பு” என்ற முகவரிக்கு கிடைக்கக் கூடியவாறு கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் அல்லது மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளார்/ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அல்லது அவர்களது சேவைப் பொறுப்பாளரினால் பதிவூத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அன்றைய தினத்திற்கு பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பப்படிவங்கள் நிராகாpக்கப்படும்.
08. வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைக் கொண்டோர் மாத்திரம் விண்ணப்பித்துள்ளனர் எனும் ஆரம்ப எடுகோளுக்கமைய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி அல்லது அதற்கு முன்னர் பரீட்சைக் கட்டணத்தை செலுத்தி அதற்குரிய பற்றுச்சீட்டுடன்
சரியாகப் பூர்த்தி செய்து அனுப்பியூள்ள விண்ணப்பதாரர்களுக்கு பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் பரீட்சைக்குரிய அனுமதிப்பத்திரங்கள் அனுப்பப்படும். விண்ணப்பதாரிகளுக்கு அனுமதிப்பத்திரம் அனுப்பப்பட்டவூடன் அது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை அறிவித்தல் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் பிரசுரிக்கப்படும். அறிவித்தல்
வெளியிடப்பட்டு 02 அல்லது 03 நாட்களில் அனுமதிப்பத்திரம் கிடைக்காத பட்சத்தில் அது தொடர்பாக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு இலங்கைப் பரீட்சைத் திணைக்கத்திற்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கும் போது விண்ணப்பதாரியின் முழுப்பெயா், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் விண்ணப்பித்த பரீட்சையின் பெயரைக் குறிப்பிட வேண்டும். கொழும்பிற்கு வெளியிலுள்ள விண்ணப்பதாரியாயின் அவ் விபரங்களுடன் பிரவேச அனுமதிப்பத்திரத்தின் பிரதியை அனுப்புவதற்குரிய பெக்ஸ் இலக்கத்துடன் கோரிக்கை கடிதத்தை பெக்ஸ் மூலம் அனுப்பி இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வது பயன்மிக்கதாக அமையூம். பரீட்சைத் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளும் வேளையில் தேவையாயின் விண்ணப்பதாரியின் பரீட்சார்த்தி அந்தஸ்தினை உறுதிப்படுத்துவதற்காக விண்ணப்பப்படிவத்தின் நிழற்படப் பிரதி, பரீட்சைக் கட்டணம் கொடுப்பனவிற்கு உரியதாயின் அதற்கான பற்றுச்சீட்டுப் பிரதியூம் விண்ணப்பப்படிவத்தை தபாலில் அனுப்பும் போது பதிவூ செய்யப்பட்ட பற்றுச் சீட்டினையூம் தயாராக
வைத்திருப்பது பயன்மிக்கதாகும். பரீட்சார்த்திக்கு பரீட்சை அனுமதிப்பத்திரத்தினை வழங்குவது பரீட்சைக்கு தோற்றுவதற்கு
சகல தகைமைகளையூம் பூர்த்தி செய்வதாக ஏற்றுக்கொண்டல்ல என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
09. i. விண்ணப்பப்படிவத்திலும் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்திலும் பரீட்சாத்தியின் கையொப்பம் நிறுவனப் பொறுப்பாளர் அல்லது அவரினால் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தா; ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். பரீட்சார்த்தி தமக்கு பணிக்கப்பட்டுள்ள பரீட்சை மண்டபத்தில்
உரிய பரீட்சை இலக்கத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். பரீட்சைக்குத் தோற்றும் சகல பரீட்சார்த்திகளும் பரீட்சையின் முதலாவது தினத்தில் தமது ஒப்பத்தை உறுதிப்படுத்திய பரீட்சை அனுமதிப்பத்திரத்தை மண்டபப் பொறுப்பாளருக்கு கையளிக்க வேண்டும். தமது அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரிக்கு பரீட்சைக்குத் தோற்ற அனுமதி வழங்கப்படமாட்டாது.
ii. மேற்கூறப்பட்ட 08 ஆவது வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை நிறைவேற்றத் தவறும் பரீட்சார்த்திகளின் (பின்னர் சமர்ப்பிக்கப்படும்) முறைப்பாடுகள் கருத்திற் கொள்ளப்படமாட்டாது.
10. பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்தில் தாம் தோற்றும் சகல பாடங்களிற்கும் பரீட்சை மண்டபப் பொறுப்பாளர் திருப்தி அடையூம் வகையில் தமது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக பின்வரும் ஆவணங்களில் யாதாயினும் ஓர் ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படும்:-
i. தேசிய ஆள் அடையாள அட்டை அல்லது
ii. செல்லுபடியாகும் வெளிநாட்டுக் கடவூச்சீட்டு
iii. செல்லுபடியாகும் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம்.
அவ்வாறே பரீட்சார்த்திகளின் ஆள் அடையாளத்தினை உறுதிப்பத்தக்கூடிய வகையில் முகம் மற்றும் இரு காதுகளை மறைக்காத வகையில் பரீட்சை மண்டபத்தினுள் பிரவேசிக்க வேண்டும்.
அவ்வாறு தம் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்த மறுக்கும் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் பரீட்சை மண்டபத்தினுள் பிரவேசித்த நேரம் முதல் பரீட்சை முடிவடைந்து அங்கிருந்து வெளியேறும் வரை பரீட்சை அதிகாரிகளுக்கு பரீட்சார்த்தியை அடையாளம் காணக்கூடிய வகையில் முகம் மற்றும் இருகாதுகளை மறைக்காத வண்ணம் இருத்தல் வேண்டும்.
11. பரீட்சைக் கட்டணம்:
(அ) இப்பரீட்சைக்காக அறவிடப்படும் கட்டணங்கள் எக்காரணம் கொண்டும் மீளச்செலுத்தப்படமாட்டாது என்பதுடன் வேறு எந்தவொரு பரீட்சைக் கட்டணத்திற்காகவூம் மாற்ற இடமளிக்கப்படமாட்டாது
(ஆ) முழுமையான பரீட்சை அல்லது அதில் ஒரு பகுதிக்காக முதற்தடவையில் தோற்றுகையில் கட்டணம் அறவிடப்படமாட்டாது
(இ) அதற்குப் பின்னர் ஒவ்வொரு தடவைகளுக்காகவூம் அறவிடப்படும் கட்டணம் பின்வருமாறு :
முழுமையான பரீட்சைக் கட்டணம் : ரூ. 500
ஒரு பாடத்திற்காக : ரூ. 250
இப் பரீட்சைக் கட்டணம் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பிற்கு 20-03-02-13 இல் வைப்பிலிடக் கூடிவாறு நாட்டில் அமைந்துள்ள எந்தவொரு தபால் அல்லது உப தபால் அலுவலகத்தில் செலுத்திப் பெற்றுக் கொள்ளப்பட்ட பற்றுச் சீட்டினை விண்ணப்பப்படிவத்தில் உரிய இடத்தில் கழராத வண்ணம் ஒட்டி அனுப்ப வேண்டும். பற்றுச் சீட்டின் நிழற்படப் பிரதியினை வைத்திருப்பது பயன்மிக்கதாகும்.
12. பரீட்சை நடாத்துவது மற்றும் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விதிக்கப்படும் சட்ட ஒழுங்குகளுக்கு பரீட்சார்த்தி கட்டுப்படவேண்டும். இச்சட்டங்களை மீறும்பட்சத்தில் பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் விதிக்கப்படும் தண்டனைக்கு அவர் உட்படவேண்டும் என்பதனை அறியத்தருகிறேன்.
13. சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் பிரசுhpக்கப்படும் அறிவித்தலின் வாசகங்களில் ஏதேனும் பொருத்தமின்மை அல்லது தொடா;பின்மைகள் காணப்படும் பட்சத்தில் சிங்கள மொழி மூலமான அறிவித்தலே அமுலில்
இருக்கும்.
14. இவ்வறிவித்தல் மூலம் வெளிப்படுத்தப்படாத ஏதேனும் விடயங்கள் இருப்பின் அது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமை கல்வி அமைச்சின் செயலாளருக்குரியதாகும்.
எம். என். ரணசிங்க
செயலாளர்
கல்வி அமைச்சு.
இசுருபாய
பெலவத்தை
2019 ஒற்றௌபர் 04