இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை என தனியான சேவையொன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
கல்வியின் தரத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் பாடவிதானங்களை நவீனமயப்படுத்தல் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுத்தல் என்பவற்றிற்கு ஆசிரிய ஆலோசகர்கள் பங்களித்து வருகின்றனர்.1960 முதல் ஆசிரிய ஆலோசகர் சேவை இடம்பெற்று வருகிறது. 2007 இல் இதற்காக தனியான சேவை உருவாக்குமாறு கோரப்பட்டது. இது தொடர்பில் 2016 முதல் கல்வி அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையால் இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
4471 ஆசிரிய ஆலோசகர்களை நியமிப்பதற்கு முகாமைத்துவ சேவை திணைக்களம், தேசிய சம்பள மற்றும் சேவை ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு என்பவற்றின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. (தினகரன்)
ript>