இலங்கை கணக்காளர் சேவையின் தரம் 111 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட/ திறந்த
போட்டிப் பரீட்சை – 2017/ 2018
இலங்கை கணக்காளர் சேவையின் தரம் 111 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி
செய்துள்ள இலங்கையர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த அறிவித்தலில் ”சேவை”” என்பது, இலங்கைக் கணக்காளர் சேவையை (இ.க.சே) குறிக்கும்.
1. பரீட்சைத் திகதி.- பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் 2019, நவெம்பர் மாதத்தில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பரீட்சை நடாத்தப்படும். இப்பரீட்சையை பிற்போடுவதற்கு அல்லது இரத்துச் செய்வதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.
2. இந்தப் பரீட்சையின் மூலம் நிரப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற
வெற்றிடங்களின் அளவூ பின்வருமாறு:
திறந்த – 86
மட்டுப்படுத்தப்பட்ட – 60
3. ஆட்சேர்ப்பு முறை.- நியமனத்திற்காகத் தெரிவூ செய்யப்படுவதானது, எழுத்து மூலப் பரீட்சையில் ஒவ்வொரு பாடத்திற்கும் 40 புள்ளிகளுக்குக் குறையாமல் பெற்று மொத்தப் புள்ளிகளின் திறமையின் ஒழுங்கின் பிரகாரம் பரீட்சித்தல்
பரீட்சையொன்றுக்கு அழைத்து நியமனத்திற்காக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படுகின்ற நேர்முகப் பரீட்சைக் குழுவொன்றினால் தகைமைகள் இருக்கின்றனவா என்பதைப் பரீட்சித்த பின்னரேயாகும்.
3.1 இந்தப் பதவிக்காக நியமிக்கப்படுகின்ற எண்ணிக்கை மற்றும் நியமனம் செயல்வலுப் பெறுகின்ற திகதி என்பன அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கட்டளையின் பிரகாரம் தீர்மானிக்கப்படும். ஏதேனும்
வெற்றிடங்களின் எண்ணிக்கையை அல்லது சகல வெற்றிடங்களையூம் நிரப்புவதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவூக்கு அதிகாரம் உண்டு.
4. தகைமைகள்
4.1 திறந்த போட்டிப் பரீட்சை
(அ) கல்வித் தகைமைகள் :
(i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலே வர்த்தகம், முகாமைத்துவம், கணக்கியல், பொருளியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல்;
அல்லது
(ii) இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரியின்/ இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் கணக்கியல் அல்லது வர்த்தகம் பற்றிய உயர் டிப்ளோமாதாரர் ஒருவராகவிருத்தல்;
அல்லது
(iii) இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தில் அல்லது வேறொரு பொதுநலவாய நாட்டில் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தில் தகுதிச்சான்றுடைய 11 அல்லது இடைநிலைப் பரீட்சை அல்லது
கணக்கியல் மற்றும் வணிகச் சான்றிதழ் 11 அல்லது வணிக கட்டத் தேர்வூ அல்லது அதிலும் கூடிய உயர்நிலைப் பரீட்சை ஒன்றிலே சித்தியடைந்திருத்தல்;
அல்லது
(iஎ) ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டைச் சேர்ந்த பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனம் ஒன்றில் நடாத்தப்படும் செலவினம் மற்றும் முகாமைத்துவப் பரீட்சையின் 1 மற்றும் 11 ஆம் பகுதிகள் அல்லது இடைநிலைப் பரீட்சை அல்லது அதிலும் கூடிய உயர்நிலைப் பரீட்சை ஒன்றிலே சித்தியடைந்திருத்தல்;
அல்லது
(எ) ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டின் சான்றிதழ் பெற்ற கணக்காளர்களின் நிறுவகத்தில் 1 ஆவது தொழில்சார் மட்டத்தில் அல்லது அதிலும் கூடிய உயர் மட்டத்திலான பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்;
அல்லது
(எi) ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டின் சான்றிதழ் பெற்ற கணக்காளர்களின் பட்டயச் சங்கத்தின் 1 ஆவது 11 ஆவது பகுதிக்குரிய பரீட்சை அல்லது அதிலும் கூடிய பரீட்சை ஒன்றிலே சித்தியடைந்திருத்தல வேண்டும்;
அல்லது
(எii) ஐக்கிய இராச்சியத்தின் செயலாளர்களின் மற்றும் நிருவாகிகளின் பட்டய நிறுவனத்தின் இறுதிப் பரீட்சை.
(ஆ) உடல்சார் தகைமைகள் : சகல விண்ணப்பதாரர்களும் இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும்
பணியாற்றுவதற்கு அனைத்து வழிகளிலும் உடல்சார் தகைமையினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(இ) ஏனைய தகைமைகள் :
(i) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
(ii) விண்ணப்பதாரர்கள் சிறந்த நடத்தை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
(iii) இலங்கை கணக்காளர் சேவையின் ஆட்சேர்ப்புக்காக நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக நடாத்தப்பட்ட விசேட திறந்த போட்டிப் பரீட்சை அடங்கலாக) இரண்டு தடவைகளுக்கு மேல் எந்தவொரு நபரும் தோற்றுவதற்கு அனுமதி கிடையாது.
(iஎ) யாதேனுமொரு சமயத் தலைவராக செயற்படும் எவரும் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தகைமை
பெற மாட்டார்.
(எ) சேவைக்கு நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான தகைமைகளை பஷுர்த்தி செய்துள்ளதாக கருதுவதற்கு விண்ணப்பதாரர்இ 4.1(அ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள
தகைமைகளை 2019இ ஓகத்து மாதம் 02 ஆந் திகதியன்று சகல வழிகளிலும் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
(ஈ) வயது.- 2019 ஓகத்து மாதம் 02 ஆந் திகதியன்று 22 வயதிற்குக் குறையாதவராகவூம் 30 வயதுக்கு மேற்படாத வராகவூம் இருத்தல் வேண்டும். (இச் சந்தர்ப்பத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்படும்
வகையில் அதிகபட்ச வயது 30 ஆகக் கருதப்படும்).
4.2 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை :
(அ) அனுபவத்திற்கான தகைமைகள் :
(i) மேற்படி 4.1 (அ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதேனுமொரு தகைமையூடன் 2019.08.02 ஆந் திகதியன்று அரசாங்க அல்லது மாகாண அரசாங்க சேவையில் (05) ஐந்து வருடங்களுக்குக் குறையாத திருப்திகரமான தொடர்ச்சியான நிரந்தர சேவைக் காலம் ஒன்றுடன் குறித்த தினத்தன்று
ஆகக் குறைந்தது 05 சம்பள ஏற்றங்களைப் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
(ii) அரசாங்க அல்லது மாகாண சேவையில் நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய MN1-2006 (ஏ) இனைக் கொண்ட சம்பள அளவூத் திட்டத்தில் அல்லது அதிலும் கூடிய சம்பள அளவூத் திட்டத்திற்குரிய பதவி ஒன்றில் 10 வருடங்களிற்குக் குறையாத திருப்திகரமான சேவைக் காலம் ஒன்றினைப் பஷுர்த்தி
செய்திருத்தல் மற்றும் 10 சம்பள ஏற்றங்களை ஆகக்குறைந்தது பெற்றிருத்தல்.
(ஆ) உடல் தகைமைகள்: சகல விண்ணப்பதாரர்களும் இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் பணியாற்றுவதற்கு தேவையான உடல் நிலையினைக் கொண்டிருத்தல் வேண்டும்.