2019/ 2021ஆம் கல்வி ஆண்டின் பொருட்டு கால்நடை வள உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா பாடநெறி (NVQ 5, 6 மட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது).
கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படுகின்ற கால்நடை வள உற்பத்தி தொழில்நுட்பம்
தொடர்பில் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியின் பொருட்டு – 2019/2021ஆம் கல்வி ஆண்டின் பொருட்டு கரந்தகொல்லை
மற்றும் சீப்புக்குளம் இலங்கை கால்நடை பராமரிப்பு பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான
போட்டிப் பரீட்சை சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களில் 2019, மே மாதம் கண்டியில் நடத்தப்படும். அதன் பொருட்டு விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றன. இந்தப் பாடநெறியை பூரணப்படுத்துவதற்கு இலங்கை கால்நடை
பராமரிப்பு பாடசாலையில் முழுநேர இருவருட தங்குமிட பயிற்சியின் பின்னர் 06 மாதங்களில் தொழிற் பயிற்சியையூம் பெயர் குறிப்பிடப்படுகின்ற இரண்டு நிறுவனங்களில் இருந்து பெற்றுக் கொள்வது கட்டாயமாகும்.
2. டிப்ளோமா பாடநெறி தொடர்பிலான விபரங்கள் வருமாறு :
2.2 இந்த டிப்ளோமா பாடநெறியானது ஒரு தொழிற் பயிற்சி வேலைத்திட்டமாக அமைவதுடன்இ அரசாங்கத்தில்
தொழில் பெற்றுக்கொள்வதற்கு இத்தொழிற் தகைமைக்கு மேலதிகமாக அப்பதவிக்கு உரிய ஆட்சேர்ப்புச்
செயன்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தகைமைகளையூம் கொண்டிருத்தல் வேண்டும்.
2.3 பயிற்சிக் காலத்தின்போது மாணவர்களுக்கு நாளாந்தம் தங்குவதற்கான கொடுப்பனவூ வழங்கப்படும்.
அதேவேளை மேலதிகமாக ஏற்படுகின்ற செலவினை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
சனி, ஞாயிறு போன்ற தினங்களிலும் செயன்முறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவ்வேளையில்
விரிவூரைகளும் நடைபெறுவதால் விடுதிகளில் இருந்து மாணவர்களை அனுப்புவது மாதத்திற்கு ஒரு வார
இறுதி நாளில் மாத்திரமாகும்.
3. ஆட்சேர்ப்பிற்கான தகைமைகள் :
3.1 (அ) சிங்கள மொழி மற்றும் இலக்கியம்/ தமிழ் மொழி மற்றும் இலக்கியம்இ கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்கள் நான்கிற்கும் கட்டாயமாக திறமைச் சித்தியூம், மேலும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியூடன் ஒரே தடவையில் ஆறு (06) பாடங்களுடன் க.பொ.த.(சா.த.)ப் பரீட்சையில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
மற்றும்
க. பொ. த. (உ. த.) ப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பாடங்களை மேற்கொண்டு உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம்இ இரசாயனவியல் போன்ற பாடங்களை ஒரே தடவையில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
அல்லது
(ஆ) சிங்கள மொழி மற்றும் இலக்கியம்/ தமிழ் மொழி மற்றும் இலக்கியம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்கள் நான்கிற்கும் கட்டாயமாக திறமைச் சித்தியூம், மேலும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியூடன் ஒரே தடவையில் ஆறு (06) பாடங்களுடன் க.பொ.த. (சா.த.)ப் பரீட்சையில்
சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மற்றும்
க. பொ. த. (உ. த.) ப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் உயிரியல் விஞ்ஞானம், விவசாய விஞ்ஞானம், இரசாயனவியல் போன்ற மூன்று பாடங்களையூம் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அல்லது
(இ) சிங்கள மொழி மற்றும் இலக்கியம்/ தமிழ் மொழி மற்றும் இலக்கியம், கணிதம்இ விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்கள் நான்கிற்கும் கட்டாயமாக திறமைச் சித்தியூம், மேலும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியூடன் ஒரே தடவையில் ஆறு (06) பாடங்களுடன் க.பொ.த.(சா.த.)ப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மற்றும்
க. பொ. த. (உ. த.) ப் பரீட்சையில் தொழில்நுட்ப பாடத்துறையின் கீழ் உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பத்தின் பொருட்டு விஞ்ஞானம் மற்றும் விவசாய விஞ்ஞானம் போன்ற பாடங்களில் ஒரே தடவையில் மூன்று பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
3.2 விண்ணப்பக்காரர் 2019, ஏப்பிறல் 22 ஆந் திகதியன்று 17 வயதிற்கு குறையாமலும் 25 வயதினை விஞ்சாமலும் இருத்தல் வேண்டும்.
3.3 தேவையான கல்வித் தகைமைகளைக் கொண்டிராத மற்றும்/ அல்லது உரிய வயதெல்லையை மீறும் விண்ணப்பகாரரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3.4 பெறுபேற்றினை எதிர்பார்த்து இருப்போர; விண்ணப்பிக்க வேண்டாம்.