இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
இஸ்லாமிய சன்மார்க்க அஹதிய்யா அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை – 2017 (2020)
(பௌத்த தஹம் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்குச் சமாந்தரமானது)
1. ஒழுங்கு விதிகளும் பிரமாணங்களும்.- மேற்படி பரீட்சை பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2020 சனவரி மாதத்தில் நடாத்தப்படும். பரீட்சைக்கான பாடங்களும் பாடத்திட்டங்களும் இணைப்பு 01 இல் தரப்பட்டுள்ளன.
2. பரீட்சை நிலையங்கள்.- இணைப்பு 02 இல் கூறப்பட்டுள்ள நகரங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தோற்றும் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பரீட்சை நிலையங்கள் நிறுவப்படும்.
ஆயினும் ஏதாவதொரு நகரப் பரீட்சை நிலையத்திற்குப் போதிய விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்காத போது குறித்த
பரீட்சை நிலையம் இரத்துச் செய்யப்பட்டு அந்த நிலையத்திற்குரிய விண்ணப்பதாரிகள் அண்மையிலுள்ள வேறொரு நகரப்
பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றச் செய்யப்படுவர்.
3. ஊடக மொழி.- இப்பரீட்சை தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடாத்தப்படும். எனினும் ஒரு பரீட்சார்த்தி தான் தோற்றும் சகல பாடங்களுக்கும் இவற்றுள் யாதேனும் ஒரு மொழி மூலத்தில் மட்டுமே தோற்ற முடியூம்.
4. தகைமைகள்.- இப்பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பரீட்சார்த்தியூம் இதன் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளில் ஏதேனுமொன்றைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
4.1 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவூ செய்யப்பட்ட அஹதிய்யாப் பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களாயிருத்தல்.
அல்லது
4.2 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிரேஷ்ட தர அல்குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்த மாணவராயிருத்தல்.
அல்லது
4.3 இலங்iகைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப் படும் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் இஸ்லாம் அல்லது அரபு பாடத்தில் சித்தியடைந்தவர்களாகவிருத்தல்.
குறிப்பு.-
1. இப்பரீட்சைக்குத் தோற்றும் ஒவ்வொரு விண்ணப்பதாரியூம்இ மேலே 4 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பெற்றுள்ளாரென அஹதிய்யாப் பாடசாலையின் அதிபர் அல்லது சிரேஷ்ட அல்குர்ஆன்
மத்ரஸா அதிபர் அல்லது பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
2. பரீட்சார்த்தி ஒருவர் இப்பரீட்சைக்குப் பதிவூ செய்யப்பட்ட அஹதிய்யாப் பாடசாலை அல்லது சிரேஷ்ட அல்குர்ஆன் மத்ரஸா அல்லது பாடசாலை அதிபர் மூலமே விண்ணப்பிக்க முடியூம்.
5. பதிவூ செய்யப்பட்ட சகல அஹதிய்யாப் பாடசாலைகள் சிரேஷ்ட குர்ஆன் மத்ரஸாக்கள்இ மத்ரஸா பாடசாலைகள் என்பவற்றிற்கு விண்ணப்பப்பத்திரங்களும் அறிவூறுத் தல்களும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பப்பத்திரங்களும் அறிவூறுத்தல்களும் கிடைக்கப் பெறாத நிறுவனங்கள் ”பரீட்சை ஆணையாளர் நாயகம் ஒழுங்கமைப்பு
வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பெலவத்தை பத்தரமுல்லை”” என்ற முகவரி யூடன் தொடர்பு கொண்டு 2019 நவெம்பர் மாதம் 22 ஆந் திகதிக்கு முன் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
5.1 விண்ணப்பங்கள் யாவூம் இரு பிரதிகளில் தயாரிக்கப்பட்டு மூலப்பிரதியினைப் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்புவதோடு மற்றைய பிரதியினைக் குறிப்பிட்ட நிறுவனத்தில் கோவைப் படுத்தி வைத்திருத்தல் வேண்டும்.
5.2 விண்ணப்பங்கள் யாவூம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி 2019 திசெம்பர் மாதம் 02 ஆந் திகதி ஆகும்.
5.3 விண்ணப்பப்படிவங்கள் தௌpவாகவூம் பிழைகளின்றியூம் பூரணப்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பப்படிவங்களும் இறுதித் தினத்திற்குப் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பப்படிவங்களும் நிராகரிக்கப்படும்.
5.4 பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் பதிவூத் தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
பரீட்சை ஆணையாளர் நாயகம்
ஒழுங்கமைப்பு வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
பெலவத்தை
பத்தரமுல்லை
5.5 விண்ணப்பங்கள் கிடைத்தமை பற்றி அறிவிக்கப்பட மாட்டாது.
5.6 விண்ணப்பங்களை அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ”இஸ்லாமிய சன்மார்க்க அஹதியா
இறுதிச் சான்றிதழ் பரீட்சை 2017 (2020)”” எனவூம் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் நகரமும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
5.7 விண்ணப்பங்களோடு எவ்வித சான்றிதழையூம் இணைத்து அனுப்பக்கூடாது. அஹதிய்யாப் பாடசாலையின் அல்லது சிரேஷ்ட குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் அல்லது பாடசாலை அதிபர் விண்ணப்பதாரி குறித்த
தகைமையைப் பெற்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்தி இருத்தல் வேண்டும்.
6. பரீட்சை கட்டணம் செலுத்தும் முறை.-
6.1 இப்பரீட்சை முதற்தடவை தோற்றும் பரீட்சார்த்திகளிடமிருந்து பரீட்சைக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது. அதன் பின்னர் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு கட்டணம் ரூபா 200.00 ஆகும். நூன சித்தியை பூரணப்படுத்துவதற்காக பாடத்திற்கு பரீட்சைக் கட்டணமாக ரூபா 50.00 செலுத்துதல் வேண்டும்.
6.2 பரீட்சைக் கட்டணம் செலுத்த வேண்டிய பரீட்சார்த் திகளுக்கான முழு தொகையை இலங்கையின் எந்தவொரு அஞ்சலகத்திலும் செலுத்தி பெறப்படும் பற்றுச்சீட்டை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்புதல்
வேண்டும். (பற்றுச்சீட்டின் நிழற்படப் பிரதியொன்றினை வைத்திருத்தல் பயனுடையது.)
7. அனுமதி அட்டைகள்.- பரீட்சை அனுமதி அட்டைகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் உரிய அஹதிய்யா பாடசாலை அதிபர் அல்லது மத்ரஸா அதிபர் அல்லது பாடசாலை அதிபருக்கு விநியோகிக்கப்படும். அதிபரினால் அவ்வனுமதி அட்டைகள் உரிய பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
7.1 ஏதாவதொரு பரீட்சார்த்தி பரீட்சைக்குத் தோற்றும் ஆரம்ப தினத்திலேயே பரீட்சை அனுமதி அட்டையை பரீட்சை மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் அல்லது பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால்
குறித்தொதுக்கப்பட்ட பரீட்சை நிலையத்திலல்லாது வேறொரு பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்ற எத்தனிக்கும் பட்சத்தில் உரிய பரீட்சார்த்தியின் பரீட்சார்த்த தகவூ இரத்துச் செய்யப்படும்.
7.2 அனுமதி அட்டையிலுள்ள விண்ணப்பதாரியின் கையொப்பம் அஹதிய்யாப் பாடசாலை அதிபர் குர்ஆன் மத்ரஸா அதிபர் பாடசாலை அதிபர் அரபுக் கல்லூரி அதிபர் அரசாங்க அல்லது மாகாண அரசாங்க
சேவையின் நிரந்தர பதவிநிலை உத்தியோகத்தர் மஸ்ஜிதுக்குப் பொறுப்பான இமாம் ஆகியோரில் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
7.3 பரீட்சை நடைபெறுவதற்கு (07) ஏழு தினங்களுக்கு முன்னர் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அஹதிய்யாப் பாடசாலை குர்ஆன் மத்ரஸா பாடசாலை
என்பவற்றின் அதிபர்கள் இது தொடர்பாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்க வேண்டும்.
அத்தகைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கீழ்வரும் விடயங்கள் தெரிவிக்கப்படுதல் வேண்டும் :-
(அ) பரீட்சையின் பெயர்
(ஆ) அஹதிய்யாப் பாடசாலை/ குர்ஆன் மத்ரஸா/ அரசாங்கப் பாடசாலையின் பெயரும் கணினி இலக்கமும்
(இ) பரீட்சார்த்தியின் முழுப் பெயரும் விலாசமும்
(ஈ) பரீட்சைக்கு விண்ணப்பித்த நகரம்
(உ) விண்ணப்பத்தை சமர்ப்பித்த தபால் நிலையம்
(ஊ) பதிவூ செய்த இலக்கமும் திகதியூம்.
8. ஆளடையாளத்தை உறுதிப்படுத்தல்.- சகல பரீட்சார்த்திகளும் தாம் பரீட்சைக்குத் தோற்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் ஏற்றுக் கொள்ளத்தக்கவாறு தமது ஆளடையாளத்தை நிரூபித்தல் வேண்டும். இதற்கென கீழ்க் குறிப்பிடப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்று ஏற்றுக்கொள்ளப்படும்
8.1 தேசிய ஆளடையாள அட்டை
8.2 செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவூச்சீட்டு
8.3 அஞ்சல் அடையாள அட்டை.
9. பரீட்சை முடிவூகளை வெளியிடலும் சித்திபெற்றமையைத் தீர்மானித்தலும்.
9.1 இப்பரீட்சைக்குரிய பாடங்கள் நான்கு ஆகும். குறித்த நான்கு பாடங்களிலும் சித்தியடையூம் பரீட்சார்த்திகள் மட்டும் இப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களாகக் கருதப்படுவர்.
9.2 ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தி பெற்று ஒரு பாடத்தில் மட்டும் சித்தி பெறத்தவறுவோர் நூன சித்தி பெற்றவராகக் கருதப்படுவார். அவர்கள் அடுத்து வரும் இரண்டு பரீட்சைத் தவணைகளுக்குள் நூன சித்தி;ப் பாடத்திற்கு மாத்திரம் தோற்றி சித்தி பெற்றால் பரீட்சையில் சித்தி பெற்றௌராகக் கணிக்கப்படுவர்.
(இது 2011 ஆம் ஆண்டுக்குரிய பரீட்சை முதல் நடைமுறைப்படுத்தப்படும்.)