உயர் தரப் பெறுபேறு ஏப்ரலில்
பல்கலைக்கழக அனுமதி செப்டம்பரில்
இம்முறை நடைபெற்றுள்ள உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் அனுமதியை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்19 பிரச்சினைகள் காணப்பட்டாலும் உயர் தரப் பரீட்சையை நடாத்தி முடிக்க முடிந்துள்ளதாக கல்வி அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
மார்ச் மாதத்தில் நடைபெறும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றை ஜுன் மாத்தில் வெளியிட முடியும் என நம்பிக்கை தெரவித்த அவர், மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி தரம் 11 க்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார்.
இன்று காலை மல்வத்து அஸ்கிரிய பீடங்களின் தேரர்களை சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர் அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.