ஆசிரியர் இடமாற்றம் பெற்றுத் தருவதாகக் கூறி இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களிடம் பணம் கறக்கும் மோசடி குறித்து பல்வேறு ஆசிரியர்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும் இடமாற்ற விண்ணப்பங்களின் விபரங்களைபை் பெற்று, குறித்த ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தொகைப் பணத்தை தந்தால் இடமாற்றத்தை செய்து தருவதாககக் கூறும் கும்பல், குறித்த பணத்தை வேறு யாரிடமும் தெரிவிக்காது, கலந்துரையாடாது ஈசி கேஷ் மூலம் வைப்பிலிடும் படி அறிவுறுத்துகின்றனர்.
பணம் வைப்பிலிடப்பட்டதும், மீண்டும் ஒரு தொகைப் பணத்தை கோருகின்றனர். அதிகம் விசாரிக்க முட்பட்டாலோ, அல்லது நேரடியாக சந்தித்து வழங்குவதற்கு முட்பட்டாலோ தொடர்புகளைத் துண்டித்து விடுகின்றனர்.
சில நேரங்களில் பாடசாலையின் அதிபர்களுக்கும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உரையாடுகின்றனர்.
இச்சூழ்ச்சியில் பல ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக அறியமுடிகின்றது.
இது வரை சுமார் 35 க்கும் 40 க்கும் இடைப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அறியவருகின்றது.
கல்வி அமைச்சில் பணிபுரியும் அதிகாரிகளின் பெயர்களைக் கூறியே இவ்வாறு நிதி மோசடியில் இக்கும்பல் ஈடுபட்டுவருகின்றது.
எனவே, தொலைபேசி அழைப்பினூடாக ஆசிரியர் இடமாற்றம் பெற்றுத் தருவதாக பேரம் பேசும் எவரிடமும் ஏமாந்து விடாதிருக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இக்கும்பல் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு பாதிக்கப்பட்டவர்களது ஒத்துழைப்பே முக்கியமானது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.