வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை ரஜமகா விகாரையின் மகா மிஹிந்து குருத குண பூஜை வைபவம் எதிர்வரும் ஒக்டோபர் 4,5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒக்டேபார் 4 ஆம் திகதி பூரண அரச அனுசரணையுடன் மகா மிஹிந்து பெரகர இடம்பெறவுள்ளது.
மிஹிந்தலை விகாரையை தேசிய உரிமையாகப் பிரகடனப்படுத்தல், பொசன் மற்றும் மிஹிந்தலை மகா பெரகர ஆகியவற்றை தேசிய வைபமாக பிரகடனப்படுத்தல், ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தின் போயா தினத்தை மிஹிந்தலை தேரருக்கு நன்றி செலுத்தும் தேசிய வைபவத்தை பிரகடனப்படுத்தல், மற்றும் தேசிய விடுமுறை தினமாக அறிவித்தல் முதலானவை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் காரியாலயம் அறிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.