வேலையின்றியுள்ள இளைஞர் யுவதிகள் ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் செயற்றிட்டம் முற்றிலும் ஏமாற்றுத் தனமானது என பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்களில் சுமார் 25 ஆயிரம் பேர் குறித்த தொழிலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு மீண்டும் தொழில் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். எனினும் அவர்களையும் இந்த ஒரு லட்சம் வேலை என்ற திட்டத்திற்குள் உள்ளடக்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
புதிதாக 75 000 பேருக்கே தொழில் வழங்கப்படவுள்ளது. கிராம சேவகர் பிரிவுகள் 14 323 உள்ளன. எனவே ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு 4 தொழில் வாய்ப்புக்களே வழங்க முடியும்.
இந்த தொழிலற்றவர்களை பாதுகாப்புத் தரப்பினரும் இணைந்து நேர்காணல் செய்கின்றனர். இது ஆபத்தான நிலைமையாகும். அரச தொழில் வழங்குவாற்கான நேர்முகப் பரீ்ட்சையில் பாதுகாப்புத் தரப்பினரை இணைத்துக் கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சிரிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.