குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒரு லட்ச அரச வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள போதிலும் நியனங்களை மே மாதமளவில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் மே மாதமளிவிலயே இந்நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.