மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாது வழமைப்போன்று கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து ஆசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க இது தொடர்பான அறிவுறுத்தலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளார். பாடசாலை கட்டமைப்பில் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருந்த போதிலும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதை தடுக்கப்படுவதினால் கற்கை நெறிகளுக்கான சிபாரிசுகளை உரிய காலத்துக்குள் பூர்த்தி செய்வதில் பிரச்சினைகள் எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.