கலை வெளிவாரி (ஆங்கில பாடத்துடன்) மற்றும் விஞ்ஞானமானி (வெளிவாரி) முதல் பரீட்சை சித்தி பெற்ற ஆசிரியர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக் கோரியுள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் பாடநெறிகளில் ஒன்றைத் தொடர்ந்து கொண்டிக்க வேண்டும்.
1. ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்ட கலை பட்டக் கற்கை
2. விஞ்ஞானமானி பாடநெறி
விண்ணப்பதாரிகள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1. கலைப் பாடநெறிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2014 அல்லது அதற்கு பிறகு நடைபெற்ற பொதுக் கலைமானி (வெளிவாரி) முதல் பரீட்சையை (ஆங்கில மொழியுடன்) சித்தி பெற்றிருத்தல்
2. உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், அல்லது பிரயோக விஞ்ஞானம் ஆகிய பாடநெறிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2014 அல்லது அதன் பின்னர் நடைபெற்ற விஞ்ஞானமானி (வெளிவாரி) முதல் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்
3. விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் தினம் 5 வருட சேவைக் காலத்தைக் கொண்டிருத்தல்
4. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தேசிய கல்வியியல் கல்லூரி அல்லது தேசிய கல்வி நிறுவகத்தில் பாடநெறி யொன்றுக்காக பதிவு செய்யாதிருத்தல்
மேலும் சில நிபந்தனைகளைக் கொண்ட அறிவித்தலை கல்வி அமைச்சு சிங்கள மொழியில் வெளியிட்டுள்ளது.
இது சம்பளத்துடனான கற்றல் விடுமுறை பெற்று தொடரக்கூடிய பாடநெறியாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவுத் திகதி 21.10.2019
விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள
மேலதிக விபரங்கள் (சிங்களத்தில்)