இன்று நிதி அமைச்சருடன் பேசிய பின் ஊழியருடனும் சந்திப்பு
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொருட்டு இன்று (18) புதன்கிழமை நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துரையாடவிருப்பதாக உயர்கல்வி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பல்லைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த வாரம் ஆரம்பித்தது. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இப்போராட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.