நாட்டில் கல்வித் துறையில் சேவையாற்றும் ஆசிரியர் உட்பட்ட அனைத்து வாண்மையாளர்களுக்கும் அவர்களின் தொழில் கௌரவத்தினை ஏற்படுத்துவதற்க்காக உத்தியோகப்பூர்வ அடையாள அட்டையினை வழங்க கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தீர்மானித்துள்ளார்.
வைத்தியர்கள், பொறியியலாளர் ,கணக்காளர்கள் உட்பட்ட வாண்மை மிக்கவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போல கல்விப்புலத்தில் சேவையாற்றும் அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர், சேவை ,கல்வி நிர்வாக சேவை ,இலங்கை கல்வியியலாளர் சேவையினை சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த அடையாள அட்டை நவீன தொழில் நுட்பத்துடன் கூடியதாக அமைவதுடன் இதன் மூலம் கல்விப் புலத்தில் சேவையாற்றுபவர்களுக்கு பல விசேட சேவைகளை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.