க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் சங்கீதம் மற்றும் நடன பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் நவம்பர் 08 ஆம் திகதிக்குற்பட்ட காலத்தில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்தார்.
இதேவேளை பரீட்சார்த்திக்கு பதிலாக வேறு நபர் நடைமுறைப் பரீட்சைக்குத் தோற்றுவது தண்டணைக்குரிய குற்றமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இறுதி பெறுபேற்றில் நடைமுறைப் பரீட்சைக்கான புள்ளிகள் சேர்த்துக்கொள்ளப்படுமென்பதால் தவறாது இப் பரீட்சைக்கு தோற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடைமுறைப் பரீட்சைக்குத் தோற்றாவிடில் அப்பாடத்துக்கான பெறுபேறு வெளியிடப்பட மாட்டாதென்றும் அவர் குறிப்பிட்டார். பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அட்டைகள் பாடசாலை முகவரிக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அட்டைகள் அவர்களுடைய வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பரீட்சை அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத அதிபர்களும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டார்.