கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களை பணிக்கு அழைத்தல் புதிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு 16.11.2021 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள வழிகாட்டல் கடிதத்தில் பாடசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி காணப்படுகிறது.
எனவே,
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் விசேட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தொர்பாக
ஏற்கனவே பொது நிர்வாக சேவை அமைச்சினால் வெளியிடப்பட்ட 02/2021V மற்றும் 2021.10.01 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கையின் 6 விதியின் படி கடமைக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
பொது நிர்வாக சேவை அமைச்சினால் வெளியிடப்பட்ட 02/2021V மற்றும் 2021.10.01 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கையின் 6 விதி பின்வருமாறு
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் விசேட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களை கடமைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதோடு, அவ்வாறான ஊழியர்களை கடமைக்கு அழைப்பதாக இருப்பின், அத்தியவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவ்வாறு செய்யமுடியும் என்பதோடு, அவ்வாறான சந்தர்ப்பங்களில் கடமைக்கு வருகை தருவது வெளியேறுவதற்கு விசேட கால நேரம் வழங்கப்படுவதுடன் விசேட வசதிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்