நாட்டிலுள்ள மாகாணப் பாடசாலைகளின் விசேட கல்விப்பிரிவூகளில் நிலவூம் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமாணிப் பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவை 2 ஆம் வகுப்பில் 11 ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் – 2019
நாட்டிலுள்ள மாகாணப் பாடசாலைகளின் விசேட கல்விப்பிரிவில் நிலவூம் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமாணிப் பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவை 2 ஆம் வகுப்பில் 11 ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பாக ஆண், பெண் இருபாலார்களிடமும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த
அறிவித்தலின் இறுதியில் காணப்படும் மாதிரிப் படிவத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் 2019.10.31 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னதாக “உதவிச் செயலாளர், ஆசிரியர் தாபனக் கிளை, கல்வி அமைச்சு, இசுருபாய, பெலவத்த, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு கிடைக்கும் வண்ணம் பதிவூத்தபாலில் அனுப்புதல் வேண்டும்.
மேலும், விண்ணப்பப்படிவத்தின் தலைப்பு, சிங்கள விண்ணப்பப்படிவங்களில் சிங்கள மொழிக்கு மேலதிகமாக
ஆங்கில மொழியிலும், தமிழ் விண்ணப் பப்படிவங்களில் தமிழ் மொழிக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் குறிப்பிட வேண்டும். விண்ணப்பப்படிவம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல்மூலையில் “நாட்டிலுள்ள மாகாணப் பாடசாலைகளின் விசேட கல்விப்பிரிவில் நிலவூம் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமாணிப் பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவை 2 ஆம் வகுப்பில் 11 ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல்-2019” என கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
குறிப்பு 1.- விண்ணப்பப்படிவம் அல்லது அது தொடர்பிலான கடிதம் தபாலில் காணாமல் போதல் அல்லது தாமதித்து கிடைக்கும் விண்ணப்பப்படிவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கருத்திற் கொள்ளப்படமாட்டாது.
இறுதித் தினம் வரை விண்ணப்பப்படிவத்தைத் தாமதிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை விண்ணப்பதாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றமை தொடா;பில் அறிவிக்கப்படமாட்டாது.
02. ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதற்கான முறைமைகள்.-
2.1 விண்ணப்பதாரர்கள் இந்த அறிவித்தலின் 5.2 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளுடன் 5.3 இல் குறிப்பிடப் பட்டுள்ள தகைமைகள் பஷுர்த்தி செய்யப்பட்டுள்ளனவா? என்பதைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக
பொது நேர்முகப் பரீட்சை ஒன்றுக்குத் தோற்ற வேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகள் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பதாரிகள் நேர்முகப்பரீட்சையின் போது நிராகரிக்கப்படுவர்.
2.2 நேர்முகப்பரீட்சையில் தகைமை பெறுவோர், தொழிலின் முக்கியத்துவம் வாய்ந்த கற்றல், கற்பித்தல் தொடர்பான திறமைகளை அளவீடு செய்வதற்காக இவ் வர்த்தமானி அறிவித்தலின் 9.2 வாசகத்திற்கமைய பிரயோகப் பரீட்சைக்குட்படுத்தப்படுவர். விண்ணப்பதாரியினால் பிரயோக
பரீட்சையில் பெற்றுக்கொள்ளும் மொத்த புள்ளிகளின் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட முறைமைக்கமைய காணப்படும் வெற்றிட எண்ணிக்கைக்கு இணங்க
ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.
2.3 பிரயோகப் பரீட்சையின் போது விண்ணப்பதாரிகளுக்கு உரிய வெற்றிடப் பட்டியல் காட்சிப்படுத்தப்படும். அதன் பிரகாரம் விண்ணப்பதாரிகளினால் அச்சந்தர்ப்பத்தில் வெற்றிடம் காணப்படும்
பாடசாலைகளுக்கு தங்களது நியமனம் பெறுவதற்கான விருப்பத்தினை தொடரொழுங்கில் குறிப்பிடப்பட வேண்டும்.
குறிப்பு 2.- ஒரே பாடசாலைக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளில் பலர் சமமான புள்ளிகளைப் பெற்றிருக்கும் சந்தர்ப்பங்களில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுமதிக்கப்படும் குறிப்பிட்ட புள்ளிகளை வழங்கும் நடைமுறைக்கமைய பொருத்தமான விண்ணப்பதாரிகள் தெரிவூ செய்யப்படுவர்.
2.4 இவ்வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு மேற்கொள்வது பாடசாலை மட்டத்திலானமுறைமையை அடிப்படையாகக் கொண்டதனால் 05 வருடங்கள் பூர்த்தியாகும் வரை எக்காரணம் கொண்டும் இடமாற்றம் வழங்கப்படமாட்டாது