உயர்கல்வி துறையில் தரத்தை மேலும் மேம்படுத்தவதற்காக பல்கலைக்கழகங்களில் அபிவிருத்தி வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஐந்து மாடி தங்குமிட கட்டிடமொன்றை நிர்மாணித்தல், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் 7 மாடிகளைக்கொண்ட பல செயற்பாடு கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதலாவது கட்டமாக அங்கு 3 மாடிகள் அமைக்கப்படவுள்ளன.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்திற்காக பீட கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதலாவது கட்டம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் விரிவுரை மண்டப கட்டிடம் மற்றும் இங்கு பொறியியல் பீடத்தின் பல்லின செயற்பாடு கட்டிடமொன்றை நிர்மாணிக்கப்பட்டு வரும் பணிகளை; நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமில் நீர்வநியோகம் மற்றம் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.