காலி மாவட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என தென்மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
காலி கல்வி கோட்டத்திற்குட்பட்ட 26 பாடசாலைகள் எதிர்வரும் 21 ,22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.
இப்பாடசாலைகளின் புதிய கல்வி ஆண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தென்மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.