காலி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மூடப்படும் என்று தென் மாகாண கல்வி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலிகமகேவுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
காலி கல்விக் கோட்டத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும்.