கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூ. 4,000.00 கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முன்பள்ளிகள் அனைத்தும் மார்ச் 13 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்காக பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தினால் வழங்கப்படும் ரூ. 4,000.00 கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும் என கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது.
தை, மாசி மாதங்களுக்கான கொடுப்பனவுகள் அவர்களுக்குரிய வங்கி கணக்கில் ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதத்திற்குரிய கொடுப்பனவு ஏப்ரல் 15 திகதிக்கு முன்னரும், ஏப்ரல் மாத கொடுப்பனவு மே 01 திகதிக்கு முன்னரும் ஆசிரியர்களின்
வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது.