க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறே தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்க்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவும் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்தரங்குகளை ஒழுங்குசெய்தல், நடாத்துதல், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வினியோகம் செய்தல் முதலான அனைத்து செயற்பாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.
பரீட்சை மோசடிகளைத் தடுப்பதற்கான இச்சட்ட திட்டங்களை தனிநபரோ அல்லது நிறுவனமோ மீறும் பட்சத்தில் அது தண்டனைக்குரிய குறற்மாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.